ஞாயிறு, 25 அக்டோபர், 2009

சட்ட மொழிபெயர்ப்பு

நோக்கமுமாகும் . ஆகையால், சட்டம் ஒவ்வொரு தனிமனிதனை மட்டுமன்றி, சமுதாயம், நாடு, வாழ்க்கை, நன்மை, தீமை முயற்சி, வளர்ச்சி முதலியவைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக விருக்கிறது. ஆகையால், மனிதனைப் போல் சட்டமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. அவ்வளர்ச்சியில் பல புதிய புதிய நிலைமைகள், கருத்து வேறுபாடுகள், நுண்ணிய ஆராய்வுகள் பொதிந்து கிடக்கின்றன.‘3,
---------------------------------------------------------------
1) கலைக்களஞ்சியம், தொகுதி நான்கு, தமிழ்வளர்ச்சிக்கழகம், சென்னை,
பதி.1956 பக்கம் 386,
2) மேற்படி பதி. பக்கம் 387
3) சட்டத்தமிழ், மா. சண்முக சுப்பிரமணியம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பதி 1969, பக்கம் IX - XII
இநதியாவில் சுமார் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர் ஆட்சி நிலவியதால் ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அம்மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. இந்த கருத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களில் பெரும்பாலோர் ஆங்கிலம் அறியாததின் காரணமாக, அவர்கள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெறுமேயானால் அவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டு தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் போது அவற்றைத் திரும்பப் பெறுவதற்காகவும், நிலைநாட்டுவதற்காகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதைத் தாங்கள் நேரிலேயே தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கருதுகிறார்கள். இந்த அடிப்படையில்தான் தமிழகத்தில் இயங்குகின்ற நீதி£மன்றங்களின் நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. தமிழில் இந்த நடவடிக்கைகளை நடத்த முடியாது என எதிர்த்தவர்கள் பலர். ஆனால் புகழ்பெற்ற தலைமை நீதிபதிகள் மு.மு.இஸ்மாயில், எம்.ஆனந்தநாராயணன், எஸ்.மகராசன், மா.சண்முக சுப்பிரமணியன் ஆகியோர் இக்கருத்தை முறியடிக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டனர். சட்ட மொழிபெயர்ப்புப் பிரிவு சென்னை உயர்நீதிமனறத்தில் தொடங்கி வைத்தல், தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து தீர்ப்புத் திரட்டு என மாத இதழ் வெளியிடுதல், சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்தல், சட்டத் தமிழ் கலைச்சொல் அகராதிகளை வெளியிடுதல், போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசும், சட்டத்துரை அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் இணைந்து இம்முயற்சிகளை செயலாக்கம் பெற்றுள்ளது. இம்முயற்சி குறித்து குறிப்பிடுகையில் நீதிபதி மு.மு.இஸ்மாயில், தமிழிலே சட்ட நடவடிக்கைகளை அமுல் படுத்துவதற்கு முன்னர் பெருத்த அளவில் முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து, காரணம் என்னவென்றால் இந்த நாட்டில் அமுலில் இருக்கின்ற சட்ட முறையும், நீதித்துறையும் ஆங்கிலேய நாட்டினுடையவற்றைப் பின்பற்றி ஆங்கில ஆட்சியின் பொழுது ஏற்படுத்தப்பெற்றவை. அவை, இதன் காரணமாகவே தவறானவை என்று சொல்வதற்கில்லை. அதற்கு மாறாக அதனால் பல நன்மைகள் நாம் பெற்றிருக்கத்தான் செய்கிறோம் என்றாலும் இந்த அந்நிய ஆதிகக்கத்தின் கீழ் இவை அனைததையும் தெரிந்து கொண்டவர்கள் ஆங்கில மொழியின் மூலமாகவே தெரிந்து கொண்டார்கள். இதன் காரணமாக சட்டம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் ஆங்கில மொழியிலேயே படித்து, ஆங்கில மொழியிலேயே சிந்தித்து, ஆங்கில மொழியிலேயே வெளிப்படுத்தும் வழக்கம் உண்டாகிவிட்டது. இந்த வழக்கம் மாறவேண்டுமானால் ஆங்கிலத்திற்குப் பதிலாக தமிழிலேயே சட்டத்தைப் படித்து, சட்டப் பிரச்சினைகளைப் பற்றித் தமிழிலேயே சிந்தித்து. அத்தகைய சிந்தனையின் காரணமாக வந்த முடிவுகளைத் தமிழிலேய வெளிப்படுத்தும் வழக்கத்தைப் பெறவேண்டும். இந்த மாற்றம் ஒரு நாளில் அல்லது ஓர் ஆண்டில் நடக்கத் கூடியதல்ல. தமிழ்லேயே சட்டத்தை முழுக்க முழுக்க கற்றுக்கொள்கின்ற ஒரு புதிய தலைமுறை உண்டாகின்ற வரையிலே இந்த மாற்றத்தை முழுமையாக அடைய முடியாது. அதற்காக இந்த குறிக்கோளை அடைவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று ஆகிவிடாது.1.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக இப்பதற்கு தகுதியற்றது என சட்டத்துறையினர் கூறி வந்தனர். இலத்தீன், பிரெந்சு ஆகிய மொழிகளிலே நீதிமனறத்திற்கு ஏற்ற மொழிகள் என்று கருதப்பட்டன. நீதிமன்றத்திற்கு ஏற்ற மொழிகள் என்று கருதப்பட்டன. நீதிமன்றங்களில் அம்மொழிகளே பயன்படுத்தப்பட்டன. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட இடர்ப்பாடுகளை நீக்குவதற்காக இங்கிலாந்து நாடாளுமன்றம் இரண்டாவது ஜார்ஜ் மன்னர் ஆட்சியில் 1731 ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றியது. ஆங்கிலமே நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை நீதிமன்றமொழியாகப் பயன்படுத்தப்பெற்றது. சட்டமும் ஆங்கில மொழியில் ஆக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்ததால் சட்டததுறை தமிழில் இயங்கும் வாய்ப்பின்றி இருந்தது ஆனால் சட்டம் ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்? ஏன் நடைமுறையில் தமிழில் நீதி விசாரணை நடைபெறவேண்டும் என்பதற்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
---------------------------------------------------------------
1) தீர்ப்பு திரட்டு, ஜனவரி 80, முன்னுரை மு.மு. இஸ்மாயில்.
திரு.மா. அனந்தநாராயணன் அவர்கள் தமது அனுபவத்தில் கண்ட ஒரு நிகச்சியை எடுத்துக்காட்டாக கூறியிருப்பது அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்.
‘கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கு நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவரைக் கொன்றதை நேரில் கண்டதாகக் கூறும் சாட்சிகள் எவரும் அவ்வழக்கில் இல்லை. இதர சூழ்நிலைச் சான்றுகளிலிருந்து கொலை குற்றத்தை இவர்தாம் இழைத்திருக்க வேண்டும் என்பது தௌ¤வாகின்றது என்ற அடிப்படையில் வழங்கிடப்பட்டது.
சாட்சிகள் விசாரிக்கப்பட்டபின், இரண்டு நாட்கள் வாதங்கள் (Arguments) நடந்தன. நேரடிச் சாட்சியம் இல்லாததால், சூழ்நிலைகளிலிருந்து எவ்வாறு ‘எதிரி‘யேதான் குற்றம் இழைத்தார் என்பதை ஊகித்தறிய வேண்டும் என்று நுட்பமாகவும் விவரமாகவும் அரசாங்க வழக்கறிஞர் வாதித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞரோ குற்றம் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப்படவில்லை என்று காரணங்கள் காட்டி வாதித்தார். முடிவில், நீதிபதி கொலைக்குற்றம் மெயப்பிக்கப்பட்டதெனத் தீர்ப்புக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்தார். அத்தீர்ப்பினை நீதிபதி படித்து முடிந்ததும், நீதிமன்ற எழுத்தர் எழுந்து, குற்றம் சாட்டப்பட்டவரை நோக்கி ‘உமக்குத் தூக்குத் தண்டனை சொல்லியிருக்காங்க‘ என்று உரத்த குரலில் கூறினார்.
அவ்வாறு அவர் கூறியதும் நீதிமன்றத்தில் ஓர் அமைதி நிலவியது. அந்த அமைதியின் குரலாக ஒரு குரல் ஒலித்தது. கைதிக் கூண்டிலே நின்றுகொண்டிருந்த குற்றவாளியின் குரல்தான் அது.
‘ஜட்ஜ் துரைங்களே, இரண்டு நாளாக வக்கீலுங்க என்ன பேசினாங்கன்னு தெரியலை. நீங்க என் தீர்ப்பு படிச்சீங்கங்றதும் தெரியலை. எனக்குத் தூக்குத் தண்டனை போட்டிருக்கீங்க‘ இதுதான் தெரியுது‘ என்று இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கண்களிலே நீர்மல்க, உதடுகள் துடிக்க, குரல் தளதளக்க ‘எதிரி‘ நீதிபதியிடம் கேட்டார். நேர்மை நிறைந்த நீதிபதியின் முகத்திலே துயரக்களை தோன்றி மறைந்தது.
குற்றம் சாட்டப்பட்டவராக (accused) நிற்வர் தீர்ப்புக் குற்றவாளி (convict) ஆகிவிட்டார், கைதிக் கூண்டிலிருந்து அவரை வெளியேற்றி, அவருக்குக் கைகளிலே விலங்கிட்டுக் காவல் அதிகாரிகள் சிறைக்கு அவரை இட்டுச் சென்றனர். காவல் துறையினரின் உந்துவண்டி, மரணதண்டனை பெற்ற குற்றவாளியை ஏற்றிக்கொண்டு மாவட்டச் சிறையை நோக்கி விரைந்து சென்றது.
ஆனால், மரணதண்டனைப் பெற்றவரின் ஏக்கப் பார்வைக்கும் இதயக் குரலுக்கும் விடையே இல்லை.
இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி,
ஆங்கிலமொழி தெரியாத நிலையில் நின்று கொண்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆங்கிலத்தில் நடந்த வாதங்களும், ஆங்கில மொழியில் எழுதி வாசிக்கப்பட்டத் தீர்ப்பும் விளங்கவில்லை, எந்தக் காரணங்களின் அடிப்படையில் தமக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் அவருக்குப் புரியவில்லை, நீதியின் குரல் அவருக்குப் புரியாமலே போய்விட்டது, ஆனால் நீதி விதித்த தண்டனை அவரது உயிரைப் போக்கிவிட்டது,
இந்நிலைதான் இன்றும் நீடித்து வருகின்றது.
‘ நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, வழங்கப்படுவது நீதிதான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் அது வழங்கப்படவேண்டும்‘ என்பது நீதிமுறையின் அடிப்படைக்கொள்கையாகும். இதனால்தான் நீதிமுறையின் அடிப்படைக் கொள்கையாகம். இதனால்தான் நீதிமன்றங்கள் மக்கள் அனைவரும் காணும் வகையில் இயங்குகின்றன. நீதிமுறையின் நீர்மையும் நெறியும், பண்பும், பயனும், நாட்டு மக்கள் நலமுற அறியும் விதத்தில் அமைதல் வேண்டும். எனவே, நீதிமன்ற மொழி மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களது தாய்மொழியாகவே இருத்தல் வேண்டும் என்பது
நீதிமுறையின் இன்றியமையாத் தேவையாகிறது.‘1. நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்ல் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்புகளும், பிற நீதிமன்றத் தீர்ப்புகளின் சாரமும் இதற்கு சான்றாக விளங்குகின்றன.
முத்தரிதசபை 3-வது தரப்பு 1862 வருஷம் நம்பர் 133.
ஆங்கிலத்தில் உள்ள சட்ட நூல்களை, சட்டப் பிரிவுகளைத் தமிழில் பெயர்க்கும் பணி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழில் சட்ட நூல்களை மொழி பெயர்ப்பது எளிதன்று. திட்பமானச் சொற்களில் சட்டக் கருத்துகள் அடங்கியயிருப்பதால் இதைத் தமிழில் மொழிபெயர்ப்பது கடினமான பணியாக உள்ளது. மேலும் ஆங்கிலத்தில் உள்ள சட்ட சொற்களையெல்லாம் பெயர்க்கக்கூடிய அளவுக்குச் சொற்களஞ்கியப் பெருக்கம் இல்லாததும் ஒரு காரணமாகும். தற்காலத்தில் இதைப்பற்றிய சிந்தனை எழுந்துள்ளது. மற்றத் துறைகளைப் போல எல்லா நீதிநடவடிக்கைகளும் தமிழில் இயங்கவேண்டும் என்பதில் கருத்தொற்றுமை இல்லை. ஆனால் உயர்நீதி மன்றங்களின் நிலைமட்டும் வேறாக இருப்பதால் அதையொட்டிய பிரச்சினைகளை நோக்கும் பொழுது ஆங்கிலத்தை நீக்கவியலாததொரு சூழல் தற்போது இருக்கத்தான் செய்கிறது. என சட்டத்துறை அறிஞர்கள் கருதுகின்றனர்.
தனிப்பட்ட வகையில் சட்டவியல் அறிஞர்களால், ஆ£வலர்களால் பல சட்ட நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் அரசு சார்பில் நடைபெற்ற சட்ட மொழிபெயர்புக்கான முயற்சிகள் பற்றியும் நாம் அறிய வேண்டியுள்ளது.
ஷரத்து?
தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956ஆம் ஆண்டு (XXXIV -வது சட்டம்)
---------------------------------------------------------------
1) சட்டத்தமிழ் மா.சண்முக சுப்பிரமணியம், திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், பதி.1969. பக்கம் 188 - 190
தமிழ்க சட்டசபையில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது. இதனுடைய விதிகளின்படி சட்ட சகையில் கொண்டு வரப்படுகின்ற மசோதாக்கள், தீர்மானங்கள், ஆகியவை அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும் இந்த சட்டத்தின் நான்காவது விதியின்படி இந்தந்தத் துறைகளில் தமிழ் ஆட்சிமொழியாகக் கையாளப்படவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துகின்ற உரிமையை அரசு பெற்றது. இந்தச் சட்டத்திற்கேற்ப 1976ஆம் ஆண்டில் மாறுதல்கள் செய்யப்பட்டன அப்படிச் செய்யப்பட்ட மாறுதல்களில் முக்கியமானவை 4-ஏ மற்றும் 4-பி என்ற இரண்டு விதிகள் புதியதாகச் சேர்க்கப்பட்டன. விதி எண்.4-ஏ ன்படி தமிழ்க அரசு தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் சாட்சியங்கள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று நடைமுறைக்கு கொண்டு வரும் உரிமையைப் பெற்றது. விதி எண்.4-பி-யின்படி தமிழ்நாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அமுல்படுத்தும் உரிமையையும் தமிழக அரசு பெற்றது. இவ்வாறு விதிகள் 4-ஏ மற்றும் 4-பி ஆகியவை அமுலுக்கு வருவதற்கு முன்னரேயே தமிழக அரசு 1969 நவம்பர் 13 தேதியிட்ட எண்.2807 பொதுத்துறை (தமிழ் வளர்ச்சி-ஐ) அரசாணையின்படி தமிழகத்திலுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்படும் சாட்சியங்கள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று விதித்தது. இந்த விதியை தமிழக அரசு மேற்கூறிய சட்டத்தின் விதி எண் 4-ன்படி விளியிட்டது. இதற்குப் பின் முன்னர் கூறியவாறு இச்சட்டம் மாற்றம் பெற்ற பிறகு 1976-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அரசு ஆணையின்படி சட்ட விதி 4-பி-ன்படி 1976-ம் வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதியிலிருந்து தமிழகத்தில் உயர்நீதிமன்றத்தின் ஆதிக்கத்திலுள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்திலும் தீ£ப்புகள் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்தது.

சட்டச் சொல் அகராதி
சட்ட மொழி பெயர்ப்பிற்கு அடிப்படைத் தேவை சட்டச் சொல் அகராதி என உணரப்பட்டது. தமிழில் செய் சட்டங்களையும் நீதிமன்றத்தீர்ப்புகளையும் மொழி பெயர்ப்பதுதான் உடனடியான வேலை என்றும் சிலர் கருதக்கூடுதம். இது பணிமுறையில் சரியானப் போக்கு அன்று என்று கருதினர். சட்டக் கருத்துப் படிவங்களுக்கான சரியான தமிழ்ச் சொற்களைக் கண்டு, அவற்றைத் தமிழ்ப் பண்புக்கு ஏற்ற முறையில் உருவாக்காதவரை, சட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் நோக்கம் ஒரு சிறிதும் நிறைவேறாது. மேலும் சட்ட மொழிபெயர்புகள், சட்டத்துறை அறிஞர்கள் பலரும், தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்ய வேண்டியிருத்தலால் முரண்பாடுகள், குழப்பங்கள் இல்லாமல் சீரான மொழிபெயர்ப்பாக அமைய இச் சட்டச் சொல் அகராதி உறுதுணையாக அமையும் என்று கருதி அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.
1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் நாளிட்ட கல்வித்துறை அரசாங்க ஆணை எண்.1904 மூலம் சட்டச் சொல்லகராதிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
டாக்டர் ஆர்.பி. சேதுப்பிள்ளை, ஆர்.வி.கிருஷ்ணய்யர், பெ.நா.அப்புசாமி, அ.அழகிரிசாமி, அரசாங்கச் செயலாளர், சட்டத்துறை, தமிழக அரசு, அரசு தமிழ் மொழிபெயர்ப்பாளர், திரு.அ.பழனிசாமி, பேராசிரியர், சட்டக்கல்லூரி சென்னை (பதவிவழிச் செயலாளர்) ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர். ஆங்கில எழுத்து ‘A’ முதல் ‘C’ வரையிலான சட்டச் சொல்லகராதி ஒன்று இக்குழுவால் வெளியிடப்பட்டது. சட்ட சொற்களை எவ்வாறு தமிழில் மொழிபெயர்த்தளிப்பது என்பதைப் பற்றி இக்குழுவினர் சில அடிப்படைக கொள்கைகளை வகுத்தளித்துள்ளனர். அவற்றுள்,
1. " சட்டச் சொற்கள் சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ளத்தக்க எளிமையாய் இருக்க வேண்டுமென்பதில்லை. பல சட்டச் சொற்கள், அவற்றின் ஏகதேசப் பொருளில் பொதுமக்களால் பயன்படுத்தப்படலாமானாலும், பொதுமனிதன் அவற்றை எப்போதும். முற்றிலும் சரியான பொருளில் வழங்கவேண்டுமென்பதில்லை. possession. Adverse possession, Beneficial enjoyment Act of Insolvency, cause of action, Civil suit" போன்ற சொற்கள் உண்மையில் சட்டக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. மேலும் சில சமயங்களில் அக்கோட்பாடுகள் சிக்கல் வாய்ந்தனவாகவும் இருக்கும். இவை சட்டத்தில் நுட்பமான கருத்துக்களைத் தெரிவிக்கும் சாதனங்களாகவே சட்டம் அறிந்தோரால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சொற்களையே உருவாக்க வேண்டுமென்ற முயற்சி வருங்காலத்தில் சட்டக் கல்வியை தமிழில் புகுத்துவதற்கும், செய்சட்டங்களை மொழி பெயர்ப்பதற்கும், நீதி மன்ற நடவடிக்கைகளைத் தமிழில் நடத்துவதற்கும் உறுதியான அடிப்படையாக அமையாது. அத்தகைய அடித்தளத்தின் மீது எழுப்பப்படும் சட்டத் தமிழ் மாளிகை நிலையானதாகவும் இருக்க முடியாது.
2) சட்டக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்குத் தமிழ்மொழி தனிப்பட்டத் தகுதி உடையது என்பது வலியுறுத்தப்படுகிறது. தமிழ்மொழி இயற்கை வளமும், நீடித்த அனுபவத்தால் வந்த பண்பாட்டு வளமும்,பெருஞ் சொல்வளமும் உடைய ஒரு சிறந்த மொழியாகும். இடைக்காலப் புறக்கணிப்பாலும், புழங்காமையினாலும் இவ்வளமையில் எத்துணையோ பெரும்பகுதியை நாம் இழக்க நேர்ந்திருக்கிறது என்பதை இக்குழு எடுத்துக் காட்டியுள்ளது. இந்நிலையில் முடிந்தபோதெல்லாம் இக்குழு தமிழ் இலக்கிய வளத்தின் தலையூற்றுக்கே சென்று, தமிழ் இலக்கியத்துக்கே உரித்தான நேர் எளிமையும், தௌ¤வும், செறிவும், திட்பமும் வாய்ந்த அதன்மூலவளம் நாடி ஆய்ந்து எடுத்துப் பயன்படுத்த முனைந்தது"1.
ஆகிய இரண்டு கருத்தோட்டங்களும் பின் வரும் சட்டச் சொல்லகராதி குழுவினருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன.






---------------------------------------------------------------
1) சட்டபொருட்களஞ்சியம், முதல் பகுதி A - H. தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டச் சொல்லாக்க ஆணைக்குழு, தமிழ்நாடு அரசாங்கம், சென்னை, பதி.1967 பக்கம் X-XI
சட்ட ஆக்க ஆணைக்குழு நியமணம்,
தமிழ்நாடு அரசு சட்டத்துறையின் 1965 ஆம் ஆண்டு டிசமபர் 16ம் நாளிட்ட ஆணை எண். 1785 மூலம் தமிழக ஆட்சி மொழி (சட்ட ஆக்க) ஆணைக்குழு நியமிக்கப்பட்டது 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ம் நாளன்று இக்குழு தொடங்கப்பட்டது. முந்தைய ஆணைக்குழுவினர் பின்பற்றிய பல நடைமுறைகளை இவர்களும் பன்பற்றி சட்ட சொல்லகராதியை வெளியிட்டனர்.
தமிழில் "எல்லாச்சட்டங்களையும் மொழிபெயர்ப்பதற்கு உதவும் வகையில் முழுநிறைவு வாய்ந்ததாகவும், வருங்காலத்தில் நீதி நிர்வாகத்தை மக்களின் மொழியிலேயே நடத்துவதற்கு வழி வகுப்பதாகவும் அமையத்தக்க ஓர் ஆங்கிலத் தமிழ்ச் சட்டச் சொற்பொருள் களஞ்சியத்தை உருவாக்கும் பணியை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இவ்வகையில், வெறும் சொல்லுக்குச் சொல் பட்டியலாக ஓர் அகராதியை உருவாக்குவது அத்துணை சிறந்ததன்று என்றும், ஆங்கில மொழியில் காணப்படும் சட்ட சொற்பொருட் களஞ்சியங்களை முன்மாதிரியாகக் கொண்டு, சட்டக்கருத்து விளக்கத்துடனும், தொடர்புடைய சட்டக்கருத்துக்களின் தொகுப்புடனும் கூடிய ஒரு சட்டச் சொற் பொருட்களஞ்சியத்தை ஆக்குவதே சிறந்ததென்றும் ஆணைக்குழு கதுதியுள்ளது."1 . சட்டச் சொல் அகராதிக் குழுவில் திரு.செ.ரங்கராஜன் (சட்டக் கல்வி நெறியாளர்) திரு.கா.அப்பாத்துரை (முழுநேர உறுப்பினர்) திரு.பு.ரா.பக்கிரி சங்கர் (செயலாளர்) திரு.மா.சண்முக சுப்பிரமணியம் (கூட்டுச் செயலாளர்) ஆகியோர் இடம் பெற்று பணியாற்றினர். சட்ட சொற்களஞ்சியம் 1967 ஆம் ஆண்டு ‘A’ - ‘H’ வரையில் முதல் தொகுதியும் 1968ஆம் ஆண்டு 1 முதல் 2 வரையிலான இரண்டாம் தொகுதியும் வெளியிட்டுள்ளது.


---------------------------------------------------------------
1) சட்டபொருட்களஞ்சியம், முதற்பகுதி A - H, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டச் சொல்லாக்க ஆணைக்குழு, சென்னை, தமிழ்நாடு அரசு, 1967, ப.IX.
புதுதில்லியில் மத்திய ஆட்சிமொழி (சட்ட ஆக்கல்) ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கூடுமானவரை எல்லா ஆட்சிமொழிகளிலும் பயன்படும்படியான ஒரே சீரான சட்டச்சொல் தொகுதி உருவாக்குவது இம்மத்திய ஆணைக்குழுவின் நோக்கமாகும். மத்தியக் குழுவின் அகில இந்திய சட்ட சொற்களுள், தமிழ்மொழியில் இணைத்துக்கொள்ளத்தக்க சொற்களை தமிழ் மொழி பெயர்ப்பில் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்தச் சொற்களும் மக்கள் உடனடியாக புரிந்துகொள்ள ஏதுவாகும் எனக் கருதினர். பின்வரும் முறையில், 1967ஆம் ஆண்டு சட்ட சொல்லகராதியை உருவாக்கினர்.
(எ.டு) ABSOLUTE TITLE
1) Full and complete Ownership.
2) சொத்தில் முழுஉரிமை,
3) முழுஉரிமை மூலம், பூராஉறக்
4) ஆத்யந்திக் உறக்
Accusation.
1) The formal charging of any person with a crime.
2) முறைப்படி குற்றஞ்சாட்டுதல்,
3) குற்றச்சாட்டு
4) அபியோக்
சட்டச் சொற்களை தமிழ் இலக்கிய வழக்குச்சொற்கள் மொழி பெயர்த்து வழங்கியுள்ளனர்.
(எ.டு) Abatement - அறவு
Act of Indemnity - வழுவமைதிச் சட்டம்
Alluvion - மேலடைவு
Bench - ஆயம்
Bias - ஓரவாரம்
Carnal knowledge- மெய்யுறு புணர்ச்சி
Document - - ஆவணம்
Exemployr - - கையிகந்த (தண்டம்)
Gambling House - சூதாடுகளரி
Guardian - முதுகணர்
Spying - ஒற்றாடல்
சில சட்டச் சொற்கள் தமிழில் புதிய சொல்லாக்கங்களாக இவ்வகராதியில் இடம் பெற்றன.
(எடு) Abridgement - அருக்கம்
Conjugal rights - கலந்துறை உரிமைகள்
Corporation - கூட்டுரு
Corporation Sole - கூட்டுருத் தனிமம்
Corporation aggregate - கூட்டுருக் குழுமம்
Hotchpot - பொதுவூலம்
Hotpursuit, right of - உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை
ஆங்கில சட்த்தொடர்களில், தீர்ப்புகளில் இம்பெறும் சில மூதுரைகள் ரோமானிய, இலத்தீன் மொழிச் சொற்றொடர்களிலிருந்து இடம்பெறுபவனவாகும். இத்தொடர்களை தமிழில் உள்ள நீதி மொழித் தொடர்களைக் கொண்டு அதற்கு இணையான பெயர்ப்பாக வழங்கலாம் என்றும் இவ்வகராதியில் சில சான்றுகள் காட்டப்பட்டுள்ளன.
1) ஆள்நிலை வழக்கு ஆளுடன் முடியும்,
Actio Personalis Moritur-cum-persona
2) குற்றமனம் தூண்டாச் செயல் குற்றமில்லை.
Actns. nonfacit reum nisi mens sit rea
3) எதிர்வாதிற்கு ஏற்ற வாய்ப்பளிக்க
Audi Alterum Partem
4) வாங்குபவனே விழித்திரு
Caveat emptor
5) ஒப்படைவு அதிகாரத்தை மீட்டளிக்க இயலாது,
Delegatus non protest delegate
6) அற்பத்தில் அக்கரை சட்டத்திற்கில்லை
De minimis non curat lex
7) வானிடிந்து வீழினும் வழங்குக நீதியே
Fiat justitia ruat caelum
என்ற இந்த மொழிபெயர்ப்புகள் சட்ட மொழிபெயர்ப்பில் இத்தகைய தொடர்களை எவ்வாறு தமிழ்ல் வழங்கலாம் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக